முத்தமிடப்படும்
ஆரஞ்சு உதடுகளையும்
உடையோடு கசக்கப்படும்
செப்பு முலைகளையும்
காமத்தின் உச்சத்தில்
கிறங்கும் அகண்ட கண்களையும்
நெகிழும் இடுப்பிலிருந்து
உடைகள் நழுவுவதையும்,
நீண்ட பயணமாய் வருடிச் செல்லும்
பாம்புத் தொடைகளையும்,
மார்பழுத்தி இறுக்கிடும்
உன் அணைப்பையும்
வேறொருவன் ஆளப்போவதை
தாங்கமுடியாமல்
சாகிறேனடி நான்.
கவிதை
by
கேபிள் சங்கர்( இப்படி நாமே சொல்லிட்டாத்தான் ஒத்துப்பாங்கனு)
டிஸ்கி: இதுக்கு ஒரு நல்ல தலைப்பு கொடுங்கப்பா..
உயிரோடை கவிதை போட்டிக்கான கவிதையை படிக்க
